Skip to main content

விதையும் விளையும் வரலாறும் - 1

                                                      விதையும் விளையும் வரலாறும் - 1

                                                                        தக்காளி -1 



வரலாற்றில் தக்காளி


 நம்ம ஊர்ல தங்கம் விலை ஏறினா கூட கவலைப்பட மாட்டோம் ஆனா தக்காளி விலை ஏறினா போதும் காச் மூச்சுன்னு கத்த ஆரம்பிச்சுருவோம் ,  கிலோ 110 ரூபாயை தாண்டினா உட்காந்து கவலைப்படுவோம் . ஒருவாரத்திற்கு மேல பிரிட்ஜ்லயும் வைக்க முடியாது நல்லா ருசியா சாப்பிட்டு வேற பழகிட்டோமா , நம்ம வீட்டுல தக்காளி இல்லாமலும்  சமைக்கவே முடியாது . வேற வழியில்லாம கிலோ நூத்திப்பத்துன்னு வாங்கலாம் என்று போனால்  நல்ல தக்காளியெல்லாம் நமக்கு முன்னாடி யாரவது எடுத்துட்டு போயிருப்பாங்க  வேற வழி இல்லாம அதுலயும் வடிகட்டி தக்காளியை வாங்கிட்டு வருவோம் . சரி தக்காளி நம்ம ஆதிகாலத்து உணவா , இல்ல இந்தியாவிற்கு இடையில் வந்ததுதான் . எப்ப வந்தது எப்படி வந்தது என்று பார்ப்போம் .


கிட்டத்தட்ட 8000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்காவில் தக்காளியை பயிரிட ஆரம்பித்து விட்டார்கள் . அப்போது பயிரிடப்பட்ட தக்காளி சிறியதாகவும் புளிப்பு சுவை அதிகமாகவும் இருந்துள்ளது .  கிமு. 700களில் தென் அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் தக்காளியை உணவாக வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அது அப்படியே பரவி பெரு , பொலிவிய , சிலி மற்றும் ஈக்வடார் என்று அறியப்படும் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டஸ் மலைத் தொடர்களில் தக்காளி முதன்முதலில் தக்காளியை சாகுபடி செய்துள்ளனர் .  இது அடுத்த 1000 ஆண்டுகளில் ஆஸ்டெக்ஸ் மற்றும் இன்காஸ் நாகரிகங்களுக்கு பரவியது . சில சுற்றுலா பயணிகள் மூலம் தக்காளி செடி மத்திய அமெரிக்காவிற்கு பரவி மாயன் நாகரிக மக்களும் தக்காளி பயிர் செய்யப்பட்டது ஆனால்  இதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை , சில ஆயிவாளர்கள் கிமு 500 முன்பே மாயன்கள் தக்காளி செடியை பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்கின்றனர் .


600 வருடங்களுக்கு அமெரிக்க கண்டங்கள் “கொலம்பஸ்” மற்றும் “அமெரிகோ வெஸ்புகியால் “கண்டுபிடிக்கப்பட்டாலும். அடுத்து வந்த “பெர்னல் டியாஸ்” மற்றும்  “டி காஸ்டிலோவுக்கு”, 1538 இல் குவாத்தமாலாவிற்கு வந்தபொழுது காய்கறிகளோடு உப்பு மிளகாய் தக்காளி சேர்த்து சாப்பிடுவதை பார்த்தனர் . அதன் சுவை நன்றாக இருக்கவும் அதை ஐரோப்பாவிற்கு கொண்டுவர முடிவு செய்தனர் . 1540 களில் ஸ்பெயினில் உள்ள அப்போதைய சர்வதேச வர்த்தகமயம் ஆன செவில்லுக்கு வந்திருக்க வேண்டும். அங்கு வந்த வணிகர்கள் மூலம் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு பரவி இருக்கவேண்டும்


தக்காளி என்ற பெயர் வந்தது எப்படி


தென் அமெரிக்காவில் அஸ்டெக் இந்த பழத்தை வளர்க்கும்பொழுது சோடோமாட்டில் (Zotomatil) என்று அழைத்தனர். 1600 எழுதப்பட்ட புத்தகங்களில் Zotomatil என்றே பலரும் அழைக்கின்றனர் . பின்பு ஸ்பானியர்கள் தலை பலத்த "டொமேட் " என்று அழைத்தனர் அது மருவி ஆங்கிலேயர்கள் டொமட்டோ என்று அழைக்க ஆரம்பித்தனர் . தக்காளியோட  அறிவியல் பெயர் சோலனம் லைகோபெர்சிகம் மற்றும் அது சோலனேசி குடும்ப வகையை  சேர்ந்தது ஆகும் . தக்காளியோட சிகப்பு நிறத்திற்கு லைகோபீன் தான் காரணம் . 95 சதவீதம் நீரும் 5 சதவீதம்  வைட்டமின் சி,குளுட்டமேட்ஸ்,சிட்ரிக் அமிலங்கள், மாலிக் இருக்கின்றன .


ஓநாய் பழம் 


சோலனேசி குடும்பத்தில் பல வகைகள் உள்ளன அதில் “பெல்லடொன்னா” என்ற வகை விஷத்தன்மை உடையது பார்ப்பதற்கு தக்காளியின் இலையை போன்றே இருக்கும் இதனால் தக்காளியும் விஷத்தன்மை உடையதாக இருக்கும் என்று பிரிட்டன் மக்கள் கருதினர். மேற்கத்திய நாடுகளில் தக்காளியை ஓநாய் பழம் என்றுதான் அழைத்தார்கள் சூனியக்காரிகள் மற்றும் மந்திரவாதிகள் இந்த பழத்தை சாப்பிட்டு தங்களை விலங்குகளாக மாற்றிகொள்ளவார்கள் இங்கிலாந்து மக்கள் 1590 வரை நம்பிவந்தனர் . 1800களில் கூட அமெரிக்காவில் மேசை செடியாக வளர்த்தார்கள் . இருந்தாலும் அவர்கள் அதை சந்தேகத்துடனேயே பார்த்தார்கள் . சில புத்தகங்களில் தக்காளி விஷ தன்மை வாய்ந்த ஆப்பிள் என்று எழுதப்பட்டுள்ளது .


தக்காளியை சாப்பிட்ட சில பணக்காரர்கள் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது .உண்மையில்  ,  அவர்கள் பயன்படுத்திய  'பியூட்டர்' பாத்திரங்கள்தான் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது . தக்காளியில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும் அவை ஈயபாத்திரத்தில் சமைக்கும் பொழுது ஈயதுடன் வினையாற்றி புட் பாய்சன் ஆகியிருக்கலாம் என கூறப்பட்டது . அடுத்து இத்தாலியைச் சேர்ந்த பியட்ரோ ஆண்ட்ரியோ மாட்டியோல் என்ற மருத்துவர் தக்காளிச் செடியை மூலிகைச் செடி என்று கருதினார். தன் மருத்துவத்துக்கு அதைப் பயன்படுத்தி வந்தார். தக்காளியை அலங்காரத் தாவரமாகவே இத்தாலியில் கருதி வந்தனர். தங்கள் வீட்டுப் பூந்தோட்டங்களில் பூந்தொட்டிகளில் வைத்துத் தக்காளிச் செடியை வளர்த்தனர். பூக்கூடைகளிலும் மேஜைகளிலும்கூடத் தக்காளிச் செடியை அலங்காரப் பூக்களாக வளர்த்தனர்.


அடுத்துதான் நம்மை சோதனை செய்யும்  தக்காளிக்கே சோதனை வந்தது அது தக்காளி காயா பழமா?  1887 லில்  ஒரு சட்டம் இயற்றப்பட்டு அணைத்து காய்கறிகளுக்கு வரி விதிக்கப்பட்டது .  தக்காளியை காய்கறியில்  சேர்பதா அல்லது பழத்தில் சேர்பதா என . இறுதியில் பஞ்சாயத்து கோர்ட்டுக்கு போனது தாவரவியல் படி பார்த்தால் பழமாகவும் , சமையல் வகைப்பாட்டின் படி பார்த்தால் காய்கறி இப்படி  அவர்கள் பலவருடமா பஞ்சாயத்து பண்ணி 1893 ல்  தக்காளி பழம் கிடையாது காய்கறிதான்  என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இன்றும் அமெரிக்காவில்  கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய தக்காளி ஆராய்ச்சி மையமே செயல்படுகிறது.


இத்தாலியில் தக்காளி செடியை அலங்கார செடியாகவே பயன்படுத்தி வந்தனர் வீட்டில் உள்ள பூத்தோட்டம் பூத்தொட்டிகளில்  வைத்துத் தக்காளிச் செடியை வளர்த்தனர். பூக்கூடைகளிலும் மேஜைகளிலும்கூடத் தக்காளிச் செடியை அலங்காரப் பூக்களாக இத்தாலியர்கள் வளர்த்தனர் . இத்தாலியை சேர்ந்த பியட்ரோ ஆண்ட்ரியோ மாட்டியோல் என்ற மருத்துவர் மூலிகை செடி என்று நினைத்து மருத்துவத்திற்காக பயன்படுத்தி வந்தார் .


அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னியில் பசுமை வீடு என்ற ஒரு மையம் இருக்கிறது அதில் ஒரு சாதனைக்காக தக்காளி செடியை வளர்த்தனர் . அது 32000 பழங்கள் காய்த்து தள்ளியது அதன் மொத்த எடை 552 கிலோ இது கின்னஸ் ரெக்கார்டிலும் இடம் பெற்றது


G . முத்துராமன் 

உழவோன் 

Founder Of  Smart Vivasayi 

Comments