அன்பு என்றுமே
மரத்தடி நிழலும்
மறுமுனை குயிலும்
இதமாகவே இல்லை
நினைவுகளைப் போல
இருமாப்பாய் என்றும்
இருந்தவள் எனக்கு
இமைமூடும் வரையில்
நினைவுகளே துணைக்கு
கடலோடு மழைக்காலம்
அழகிய விழாக்காலம்
ஆளில்லா நிகழ்காலம்
நினைவோடு சுகம்காணும்
அளவான தீண்டலுக்கும்
அளவற்ற தூண்டலுக்கும்
அடிப்படையான நாதமே
அற்புதமான நினைவுகள்
இணைந்து இருப்பவர்க்கு
மட்டுமே நினைவுப்பரிசு
நம்மைப் போன்றவர்களுக்கு
நேசமிகு நினைவே பரிசு
இமைமூடியேக் கிடந்தும்
இதழ்பூக்கும் புன்னகை
இடையிடையே கிடைக்கும்
இதமான நினைவுகளால்
விரும்பாத சாபங்களுக்கும்
விரும்பிய சுகங்களுக்கும்
இணையாத வாழ்விற்கும்
துணையாகும் நினைவுகள்
உறக்கத்தை மறக்கிறேன்
இதழ் பேச மறுக்கிறேன்
கனவோடு நனைகிறேன்
நினைவோடு காய்வதற்கு
இருவருக்கு பிடித்தும்
இணையாது தடுக்கும்
இறுமாப்பு கொண்டது
இருவரின் நினைவுகள்
இருளோடு துவங்கும்
இரவோ ரணம்
ஓய்வின்றி வழியும்
"நினைவே சுகம்"
Comments
Post a Comment